வெளிநாட்டு ஒத்துழைப்புக்கு சீன வெளியுறவு அமைச்சகம் உதவி
2024-02-23 20:07:19

நடப்பாண்டில், சீனாவின் பெருநிலப்பரப்பில் மாநிலங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவை வெளிநாட்டு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு பாலம் அமைக்க சீன வெளியுறவு அமைச்சகம் உதவி அளிப்பதுடன், தரமான வளர்ச்சிக்கு சேவை வழங்குவதாக இவ்வமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் 23ஆம் நாள் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 2023ஆம் ஆண்டில், சீனாவில் தனது மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு ஒரு இலட்சம் கோடி யுவான் கொண்டுள்ள நகரங்களின் எண்ணிக்கை, 24இலிருந்து 26ஆக அதிகரித்தது. இது, சீன வளர்ச்சியின் உயிராற்றல் மற்றும் உள்ளார்ந்த ஆற்றலைக் காட்டுகின்றது என்று தெரிவித்தார்.

தவிர, கடந்த ஆண்டில், ஷான்சி, சிச்சுவான், ட்செ ஜியாங், ஷாங்காய், ஹாய்னான் உள்ளிட்ட பகுதிகளில் வெளியுறவு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை நடத்தியது. இதன் மூலம், உள்ளூர் நகரங்கள் மற்றும் மாநிலங்களின் புகழ் சர்வதேச அளவில் அதிகம் பரவியதுடன், முக்கிய தொழில்துறைகளை சர்வதேச நிலையை எட்டச் செய்வதற்கு புதிய வழிமுறைகளும் உருவாக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.