எதிப்தின் கடற்கரையில் புதிய நகர் கட்டுமானம்
2024-02-24 19:15:44

எகிப்தும் ஐக்கிய அரபு அமீரகமும் 23ஆம் நாள் எகிப்தின் புதிய நிர்வாக தலைநகரில் ஒரு உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. இவ்வுடன்படிக்கையின்படி, எகிப்தின் சுற்றுலா வளர்ச்சியை விரைவுப்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து, அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய தரை கடலுக்கு அருகில் எகிப்து கடற்கரையில் ஒரு புதிய நகரை இரு தரப்பும் கட்டியமைக்கும்.

எகிப்தின் மத்ருஹ் Matruh மாநிலத்தில் இந்நகரக் கட்டுமானத் திட்டத்தின் நிலப்பரப்பு 170 சதுர கிலோமீட்டர் ஆகும்.

எகிப்து தலைமையமைச்சர் இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்ட விழாவில் கூறுகையில், இவ்வுடன்படிக்கை நடைமுறைக்கு வந்த இரண்டு மாதகாலத்தில், எகிப்து பொருளாதாரத்துக்கு 3500 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அன்னிய நேரடி முதலீடு உட்புகுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இத்திட்டப்பணி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் காலக் கட்டத்தில் 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை ஐக்கிய அரபு அமீரகம் முதலீடு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.