மனிதரை சந்திரனுக்கு அனுப்பும் சீனாவின் புதிய விண்கலத்தின் பெயர் அறிவிப்பு
2024-02-24 19:23:46

சந்திரனுக்கு மனிதரை அனுப்பும் சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டத்தில் புதிய விண்கலத்தின் பெயரை சீனா அண்மைக்காலமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, மனிதரை ஏற்றிச்செல்லும் புதிய தலைமுறை விண்கலத்திற்கு மெங்சோ எனவும் சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும் லேண்டருக்கு லான்யுயெ எனவும் பெயர் சூட்டப்பட்டது. விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் சீனத் திட்ட அலுவலகத்தில் இருந்து 24ஆம் நாள் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

சீன விண்வெளி நிலையம் கட்டி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்திரனுக்கு செல்வதை தனது விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் அடுத்த இலக்காக சீனா பார்க்கிறது.

தற்போது, மெங்சோ விண்கலம், லான்யுயெ லேண்டர், லாங் மார்ச் 10 ஏவூர்தி ஆகியவை அனைத்தும் முதற்கட்ட ஆய்வு மற்றும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றது. பல்வேறு பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன.