அரசியல் வழிமுறையில் உக்ரைன் நெருக்கடியைத் தீர்க்க வேண்டுகோள்
2024-02-24 19:35:32

அரசியல் வழிமுறையின் மூலமாக உக்ரைன் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று 23 ஆம் நாள் ஐ.நா. பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. உக்ரைன் நெருக்கடி தீவிரமாகி 2 ஆண்டுகள் நிறைவு ஆகி விட்டபோது ஐ.ந. பாதுகாப்பு அவையில் உக்ரைன் பிரச்சினை குறித்து நடைபெற்ற வெளிப்படையான கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இக்கூட்டத்தில் கூறுகையில்,

ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா பொதுப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொடர்புடைய தீர்மானம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பன்னாட்டுச் சமூகம் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு, நேர்மையான மற்றும் நியாயமான தீர்வு காண ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும், அரசியல் மூலம் நெருக்கடியைத் தீர்ப்பதை முன்னெடுத் செல்ல வேண்டும் என்றும் ஐ.நா.வுக்கான சீனத் தூதர் ஜாங் ஜுன் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.