ரஷிய-உக்ரைன் போர் பற்றிய கருத்துக்கள்
2024-02-24 18:48:19

இவ்வாண்டு பிப்ரவரி 24ஆம் நாள் வரை, ரஷிய-உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்துள்ளது. தற்போது இந்த போரினால் பெரும் பாதிப்பு, போர் தொடுக்கப்பட்ட காரணம் ஆகியவை பற்றி உலகளாவிய மக்கள் மேலதிக புரிந்துணர்வைக் கொண்டுள்ளனர். போர் நிறுத்தம் பற்றிய வேண்டுகோள் மேலும் அவசரமானது.

ரஷிய-உக்ரைன் மோதல், பனிப் போருக்கு பின், ஐரோப்பாவில் நிகழ்ந்த மிக கடுமையான போர் ஆகும். ஐ.நாவின் புள்ளி விவரங்களின் படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், இரு தரப்புகளைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்பு  மற்றும் காயம் ஏற்பட்டது. ஒரு கோடிக்கும் மேலான உக்ரைன் மக்கள் வீடுவாசலின்றி அல்லல்பட்டனர். இந்த போர் ஏற்பட்ட பின், உலக எரியாற்றல் மற்றும் உணவு விலை பெரிதும் உயர்ந்தது. இப்போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு விரிவாகி வருகிறது. ஐரோப்பா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தணிவடைந்துள்ளது. ஏன் வீழ்ச்சியடையும் அறிகுறி காணப்பட்டுள்ளது.

இந்த போரை மீளாய்வு செய்யும் போது, பனிப் போர் சிந்தனை, இந்த போர் தொடுக்கப்பட்டதற்கு காரணமாகும் என்றும், அமெரிக்கா பகைமையை தூண்டிய ஆற்றலாக இருக்கிறது என்றும் மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷிய-உக்ரைன் போர் நிகழ்ந்த போது, பனி போர் சிந்தனையை தீவிரமாக்கும் முடிவு இதுவாகும் என்று ஆய்வாளர்கள் பொதுவாக கருத்து தெரிவித்தனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ, ரஷியாவின் பாதுகாப்பு ஆற்றலை சீர்குலைத்து, போர் ஏற்பட்டதைத் தூண்டியுள்ளது. ரஷியாவைப் பலவீனமாக்கி, ஐரோப்பாவைக் குழப்பமாக்குவதன் மூலம் நலன்களைப் பெற்று, மேலாதிக்கவாதத்தை நிலைநிறுத்துவது அமெரிக்காவின் நோக்கமாகும் என்று பொதுவாக கருதப்பட்டுள்ளது.

இதைத் தவிர, ஒரு தரப்பு தடை பயன் பெற முடியாது. இதற்கு மாறாக, இது முரண்பாடு மற்றும் பகைமையைத் தீவிரமாக்கியுள்ளது என்பதை இந்த போர் நிரூபித்துள்ளது.

புள்ளி விவரங்களின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷியா மீது 13 சுற்று பொருளாதார தடையை விதித்துள்ளது. ஆனால், போரில் ரஷியாவின் செயலை இத்தடை மாற்றவில்லை. இது ரஷியப் பொருளாதாரம் மீது சாராம்ச பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கிடையில் இப்போரினால் ஐரோப்பா பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நெருக்கடி நீண்டகாலமாக தொடர்ந்து, சிக்கலாகி, விரிவாகி வருவது, சர்வதேச சமூகத்தின் பொது நலன்களுக்குப் பொருந்தியதாக இல்லை என்பதை வரலாற்று அனுபவம் நிரூபிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு, இந்நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழிமுறையாகும் என்பதை பல்வேறு தரப்புகள் ஏற்றுக்கொள்கின்றன.