செர்பியாவின் வளர்ச்சியை முன்னேற்றும் சீன-செர்பியா தாராள வர்த்தக உடன்படிக்கை
2024-02-25 16:27:34

செர்பியா அரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வுசிச் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சீனாவும் செர்பியாவும் கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் கையொப்பமிட்ட தாராள வர்த்தக உடன்படிக்கை, செர்பியாவுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகளை வழங்கும். இதன் மூலம், செர்பியாவின் வேளாண் பொருட்களுக்கு பெரும் சந்தை கிடைக்கும். அதேவேளையில், மேலும் குறைவான விலையில் சீனப் பொருட்களை இறக்குமதி செய்வோம். அத்துடன், மேலதிக சீன நிறுவனங்களும், சீன மக்களும் செர்பியாவுக்கு வந்து, ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை மேற்கொண்டு, செர்பியாவின் வளர்ச்சியை முன்னேற்றுவார்கள் என்றார்.

மேலும், அடுத்த சில ஆண்டுகளில் இவ்வுடன்படிக்கையைச் செயல்படுத்தி, இரு தரப்பும் மேலதிக சாதனைகளைப் பெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.