சீனாவின் புதிய தர உற்பத்தி ஆற்றல் மீதான பாராட்டு
2024-02-25 19:42:05

சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என், சீன ரென்மின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, உலகளவில் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இக்கருத்து கணிப்பில் கலந்து கொண்டோரில் 81.7 விழுக்காட்டினர், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மூலம் பொருளாதார தர உயர்வை விரைவுப்படுத்தும் சீனாவின் செயலைப் பாராட்டியதோடு, புதிய தர உற்பத்தி ஆற்றல், சீனாவின் நவீனமயமாக்கம் விரைவாகவும் சீராகவும் வளர்வதற்கு உதவும் என்று கருத்து தெரிவித்தனர்.

கருத்து கணிப்பில் 93.2 விழுக்காட்டினர், சீனாவின் வலிமையான அறிவியல் தொழில் நுட்ப ஆற்றலை வெகுவாக பாராட்டினர். சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப சாதனையினால், சர்வதேச சமூகத்துக்கு மேலதிக நலன்கள் கிடைக்கும் என்று 84.9 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

சீனப் பாணி நவீனமயமாக்கம், பசுமையான வளரவல்ல நவீனமயமாக்கம் ஆகும். நவீனமயமாக்கத்தை நாடும் போக்கில், இயற்கையை மதித்து, இயற்கைக்கு ஏற்ப, இயற்கையைப் பாதுகாத்து, மனிதருக்கும் இயற்கைக்கும் இடையேயான இணக்கமான வளர்ச்சியை நனவாக்கும் சீனாவின் செயலை இக்கருத்து கணிப்பில் கலந்து கொண்டோரில் 91.9 விழுக்காட்டினர் பாராட்டினர். 59.7 விழுக்காட்டினர், சீனாவின் உயர் தர வளர்ச்சியின் எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். சீனாவின் இயற்கை சூழல் மென்மேலும் சீராக இருக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பிரேசில், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இக்கருத்து கணிப்பில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.