பாலஸ்தீன-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை
2024-02-25 17:15:49

புதிய சுற்று பாலஸ்தீன-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் அடுத்த சில நாட்களுக்குள் கதார் தலைநகர் தோஹாவுக்கு இஸ்ரேல் பிரதிநிதிக்குழுவை அனுப்பும் என்று பெயரைத் தெரிவிக்க விரும்பாத இஸ்ரேல் அலுவலர் ஒருவர் 25ஆம் நாள் விடியற்காலை தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி திங்கள் முதல், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து மற்றும் கதார் பல முறை பேச்சுவார்த்தை நடத்தின. பிப்ரவரி 23ஆம் நாள் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் புதிய சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வ முன்னேற்றமடைந்துள்ளது. ஒரு புதிய போர் நிறுத்த உடன்படிக்கையின் கட்டுக்கோப்பு குறித்து உடன்பாடு எட்டப்பட்டதாக இஸ்ரேல் கான் வானொலி நிறுவனம் 24ஆம் நாள் இஸ்ரேல் அலுவலர் கூறியதாக மேற்கோள் காட்டி தெரிவித்தது.