இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து 22 பேர் பலி
2024-02-25 16:20:24

வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சனிக்கிழமையன்று டிராக்டர் கவிழ்ந்து குளத்தில் விழுந்ததில், குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். 

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து வடமேற்கில் சுமார் 266 கிமீ தொலைவில் உள்ள கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாட்டியாலி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கங்கை நதியில் புனித நீராடுவதற்காக கதர்கஞ்ச் நகருக்கு இந்த டிராக்டர்  சென்று கொண்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகளில் சுமார் 1,50,000 பேர் இறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.