ஏமனின் தலைநகர் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தாக்குதல்
2024-02-25 17:12:55

ஏமன் ஹௌதி ஆயுதவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அல்-மசிரா தொலைக்காட்சி நிலையம் பிப்ரவரி 24ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, ஏமன் தலைநகர் சனாவின் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் அன்றிரவு பலமுறை வான் தாக்குதல் தொடுத்தன.

மேலும், அமெரிக்க ஊடகங்கள் இராணுவ வட்டாரத்தின் கூற்றை மேற்கோள் காட்டி வெளியிட்ட தகவலின்படி, ஹௌதி ஆயுதவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களைச் சேர்ந்த 18 இலக்குகளின் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் போர் விமானங்கள் 24ஆம் நாள் தாக்குதல் தொடுத்தன. வணிக கப்பல்களின் மீது ஹௌதி ஆயுதவாதிகள் அண்மையில் தொடுத்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்த நடவடிக்கை இதுவாகும்.

அண்மையில், செங்கடல் மற்றும் ஏடென் வளைகுடாவில் பயணித்த அமெரிக்க மற்றும் பிரிட்டனின் பல சரக்கு கப்பல்கள், ஹௌதி ஆயுதவாதிகளால் தாக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.