ரஷியா மீதான புதிய தடைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
2024-02-25 19:40:58

ரஷிய-உக்ரைன் மோதல் தொடுக்கப்பட்ட 2வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரஷியா மீதான 13ஆவது சுற்று தடைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் பிப்ரவரி 23ஆம் நாள் அறிவித்தது.

106 நபர்களுக்கும் 88 நிறுவனங்களுக்கும் புதிதாக தடை விதிக்கப்படும் என்றும், ஏனெனில், “உக்ரைனின் உரிமை பிரதேச ஒருமைப்பாடு, அரசுரிமை மற்றும் சுதந்திரத்தைச் சீர்குலைத்து அச்சறுத்தும் செயல்களுக்கு இந்த நபர்களும், நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும்” என்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் நடவடிக்கையாக, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான தடுப்புப் பட்டியலை ரஷியா பெருமளவில் விரிவாக்கும் என்றும், ஐரோப்பாவைச் சேர்ந்த தொடர்புடையவர் ரஷியாவின் உரிமைப் பிரதேசத்தில் நுழைவதற்கு தடை விதிக்கும் என்றும் ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையத் தளத்தில் 23ஆம் நாள் தெரிவிக்கப்பட்டது.