ஐ.நாவின் 78வது பொது பேரவை தலைவரின் வேண்டுகோள்
2024-02-25 16:34:51

ஐ.நாவின் 78வது பொது பேரவையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பிப்ரவரி 23ஆம் நாள் அண்மை கிழக்கு பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரண மற்றும் பணி முகமையின் இயக்குநருக்கு கடிதம் அனுப்பினார். இந்த முகமையின் பணிகளுக்கு பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் இக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், காசா பிரதேசத்தில் தொடர்ச்சியான மற்றும் கடுமையான மனித நேயச் சூழ்நிலை பற்றியும், அண்மை கிழக்கு பகுதியிலுள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் நிவாரண மற்றும் பணி முகமை சந்தித்த சவால்கள் பற்றியும் பிரான்சிஸ் ஏமாற்றம் தெரிவித்தார். ஐ.நாவின் உறுப்பு நாடுகள், இம்முகமைக்கு தொடரவல்ல நிதி மற்றும் அரசியல் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.