உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்ற 2024ஆம் ஆண்டு சீன விளக்கு விழா கலை நிகழ்ச்சி
2024-02-26 10:10:37

பிப்ரவரி 24ஆம் நாள், சீன ஊடகக் குழுமம் 2024 ஆம் ஆண்டு விளக்கு விழா கலைநிகழ்ச்சியை வெற்றிகரமாக ஒளிபரப்பியது.

தொடர்புடைய தரவுகளின்படி, பிப்ரவரி 25ஆம் நாள் வரை, சுமார் 35 கோடியே 3 இலட்சம் மக்கள் இந்நிகழ்ச்சியை கண்டு ரசித்துள்ளதோடு, சுமார் 299 கோடி மக்கள் சமூக ஊடகங்களில் இந்நகழ்ச்சி குறித்து வழி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சீன ஊடகக் குழுமம் வழங்கிய இந்நிகழ்ச்சி பற்றிய 18 சிறப்பு விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் 80க்கும் மேலான மொழிகளிலான செய்திகள், பி.பி.சி, இத்தாலி வானொலி மற்றும் தொலைகாட்சி நிலையம் உள்ளிட்ட 13 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 18 செய்திஊடங்கள் மற்றும் புதிய ஊடக மேடைகளால் ஒளிப்பரப்பட்டன. இந்நிகழ்ச்சியை சி.ஜி.டி.என் 68 மொழிகளில் வழங்கியது. இது தொடர்பாக உலகம் முழுவதும்  1210 செய்திகள் வெளியாகின. அவற்றை உலகளவில் 17 கோடி மக்கள் படித்துள்ளனர்.