வளரும் நாடுகளின் விருப்பத்தை வெளிப்படுத்திய மலேசியத் தலைமையமைச்சரின் கருத்து
2024-02-26 19:26:19

மேலை நாடுகளுக்கு சினோபோபியா(Sinophobia) உள்ளது என்று மலேசியத் தலைமையமைச்சர் அண்மையில் பேட்டி அளித்த போது கூறினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் பிப்ரவரி 26ஆம் நாள் கூறுகையில், பரந்துபட்ட வளரும் நாடுகள் தற்சார்ப்பில் ஊன்றி நின்று, வளர்ச்சியை நாடி வருகின்ற விருப்பத்தை இது வெளிப்படுத்தியுள்ளது. சீனாவின் வளர்ச்சி, உலகத்துக்கு வாய்ப்புகளை வழங்கும். எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையாது என்றார்.

மேலும், சமாதான சக வாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில், பல்வேறு நாடுகளுடன் நட்புப்பூர்வ ஒத்துழைப்புகளை சீனா மேற்கொண்டு, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.