உலக வர்த்தக அமைப்பின் 12ஆவது "சீனத் திட்டம்" குறித்த வட்டமேசை உயர் மட்ட மன்றக் கூட்டம்
2024-02-26 11:23:42

பிப்ரவரி 25ஆம் நாள் உலக வர்த்தக அமைப்பின் 12ஆவது "சீனத் திட்டம்" வட்டமேசை உயர் மட்ட மன்றக்கூட்டம்  ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நடைபெற்றது. சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவோ இந்த மன்றத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், அரபு நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளைப் பலதரப்பு வர்த்தக அமைப்பில் ஒருங்கிணைப்பதை சீனா எப்போதும் ஆதரித்து வருகிறது எனத் தெரிவித்தார். மேலும் சீனா சொந்த வளர்ச்சியுடன் உலகிற்குப் பயனளிப்பதில் ஊன்றி நின்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், பலதரப்பு வர்த்தக அமைப்பு கட்டுக்கோப்புக்குள் தெற்கு தெற்கு ஒத்துழைப்பைச் சீனா தொடர்ந்து மேற்கொண்டு சீனத் திட்டத்தை மேலும் சிறந்த முறையில் செயல்படுத்தும் எனவும் கூறினார். உலக வளர்ச்சி முன்மொழிவை நடைமுறைச் செயல்களுடன் செயல்படுத்தி, உலக வளர்ச்சிக்கான பொது எதிர்காலத்தை உருவாக்குவதை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.