பாலஸ்தீன அரசு பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
2024-02-26 18:32:26

பாலஸ்தீன அரசு பதவியிலிருந்து விலகுவதாக அந்நாட்டின் தலைமையமைச்சர் முஹம்மது இப்ராஹிம் ஷ்டய்யே பிப்ரவரி 26ஆம் நாள் ரமல்லாஹ் நகரில் அறிவித்தார்.

காசா பிரதேசத்தில் ஆக்கிரமிப்புப் போர் மற்றும் இதனால் ஏற்பட்டுள்ள அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளும், ஜெருசலேம் மற்றும் ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் நிலவும் சூழ்நிலையும், இந்த முடிவுடன் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்தார்.

ஷ்டய்யே தலைமையிலுள்ள பாலஸ்தீன அரசு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.