இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டும்
2024-02-26 16:58:01

இவ்வாண்டு வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் வருகை 25 லட்சத்தை தாண்டும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, இந்த இலக்கை அடைய முடியும் என்று அலி சப்ரி கூறினார்.

2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்ததாகவும், இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் இவ்வெண்ணிக்கை இரண்டு லட்சத்து பத்தாயிரமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்த்து 7 ஆயிரத்து 639 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இவ்வாண்டின் பிப்ரவரி 1 மற்றும் 18 ஆம் நாளுக்கு இடையில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 736 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அலி சப்ரி கூறினார்.