தேர்தலுக்கு முன்னதாக வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வை அதிகரிக்க இந்தியா திட்டம்
2024-02-27 18:55:05

இந்திய தேர்தல் ஆணையம் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களின் பரந்த வலைப்பின்னல் மூலம் இந்தியாவில் தேர்தல் விழிப்புணர்வை மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம், இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் தபால் துறையுடன் வாக்காளர்களின் விழிப்புணர்வை அதிகரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திங்களன்று கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்ற பொதுதேர்தல் இவ்வாண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 91 கோடி வாக்காளர்களில் சுமார் 30 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.

அதிகாரபூர்வ ஆதாரங்களின்படி, இந்தியா முழுவதும் தற்போது கிட்டத்தட்ட 97 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.