உலக மனித உரிமை லட்சியத்துக்கு புதிய பங்காற்றும் சீனா
2024-02-27 18:29:11

ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 55வது கூட்டம் அண்மையில் துவங்கியது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் பிப்ரவரி 27ஆம் நாள் கூறுகையில், மனித உரிமை கவுன்சிலானது, மனத உரிமை விவகாரங்களை விவாதம் நடத்தும் மைய மேடையாகும். தற்போது சர்வதேச சூழ்நிலை பதற்றமாகி வருகிறது. நெருக்கடிகள் மற்றும் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இப்பின்னணியில், உலகளவில் மனித உரிமை மேலாண்மைக்கான பற்றாக்குறை மேலும் மோசமாகி வருகிறது. பல்வேறு தரப்புகள் ஒத்த கருத்துகளை உருவாக்கி, ஒற்றுமையுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், மனித உரிமை கவுன்சிலின் பணிக்கு சீனா எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. நடப்பு கவுன்சிலின் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு, பல்வேறு தரப்புகள் மனித உரிமை விவாகரம் குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகளைச் சீனா முன்னேற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.