சீனாவின் புத்தாக்க வளர்ச்சியை அமெரிக்கா தடுக்க முடியாது
2024-02-27 19:32:29

சில்லுகளின் ஏற்றுமதியை அமெரிக்கா கட்டுப்படுத்துவது, தொழில் நிறுவனங்களின் போட்டியாற்றலைச் சீர்குலைக்கும் என்று அமெரிக்காவின் சில்லு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் பிப்ரவரி 27ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவின் தடை நடவடிக்கை, சீனாவின் புத்தாக்க வளர்ச்சியைத் தடுக்க முடியாது. அதேவேளையில், அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட முழு தொழிற்துறையின் சீரான வளர்ச்சிக்கும் இது துணை புரியாது என்றார்.

மேலும், சந்தைப் பொருளாதாரம் மற்றும் நியாயமாக போட்டியிடும் கோட்பாட்டை அமெரிக்கா பின்பற்றி, பல்வேறு நாடுகள் சீரான போட்டிகளின் மூலம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.