உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குனருடன் சீன வணிக அமைச்சர் சந்திப்பு
2024-02-27 09:59:38

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர் நிலை மாநாட்டின் போது, சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவ், உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குனர் இவேலாவை 25ஆம் நாள் சந்தித்தார்.

வாங் வென்டாவ் கூறுகையில், இந்த மாநாட்டில் மேலதிக நடைமுறை சாதனைகளை அடைய, சீனா அனைத்து தரப்புகளுடனும் இணைந்து பணியாற்றும் என்றும், உலக வர்த்தக அமைப்பின் சட்ட கட்டமைப்பில் முதலீட்டை எளிதாக்குதல் ஒப்பந்தத்தைச் சேர்ப்பதை சீனா ஆதரித்து, காலத்துக்கு ஏற்ப பலதரப்பு வர்த்தக விதிகளை ஊக்குவிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உலக வர்த்தக அமைப்பின் பணிகளில் சீனா எப்போதும் ஆக்கப்பூர்வமாக பங்கேற்று, நேர்மறையான சாதனைகளை பெற பல பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து வருகிறது என்று இவேலா தெரிவித்தார்.