ஐ.நா மனித உரிமைகள் செயற்குழுவின் 55ஆவது கூட்டத்தொடரில் சீனாவின் கருத்துக்கள்
2024-02-27 10:41:36

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 26ஆம் நாள் காணொளி வழியாக, ஐ.நா மனித உரிமைகள் செயற்குழுவின் 55ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். ஒத்த கருத்துக்களை விரிவாக்கி, ஒற்றுமையாக ஒத்துழைத்து, உலகின் மனித உரிமை இலட்சியத்தின் சீரான வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவது என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார்.

தற்போது, சர்வதேச நிலைமை கொந்தளிப்பாக உள்ளது. நெருக்கடியும் மோதலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. மக்களை உயர் தகுநிலையில் வைத்து, மக்களின் வாழும் உரிமை மற்றும் வளர்ச்சி உரிமையில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு நாடுகளின் சொந்தமான மனித உரிமை வளர்ச்சிப் பாதைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பெரிய நாடு என்ற பொறுப்பேற்றுள்ள சீனா, உலகின் மனித உரிமை மேலாண்மையில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து வருகிறது. சீனாவின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தின் சாதனைகள் மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும். பல்வேறு தரப்புகளுடன் சேர்ந்து, உலகின் மனித உரிமை இலட்சியத்தின் சீரான வளர்ச்சிக்கு புகிய பங்காற்ற சீனா முயற்சி செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.