அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் சீன வணிக அமைச்சர் சந்திப்பு
2024-02-27 09:42:06

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர் நிலை மாநாட்டின் போது, சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவ், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் தையை 26ஆம் நாள் சந்தித்தார். இந்த மாநாட்டில் நடைமுறை சாதனைகளைக் கூட்டாக ஊக்குவிப்பது, பரஸ்பர அக்கறை கொண்ட பலதரப்பு மற்றும் இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சனைகள் ஆகியவை குறித்து, இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். சீனா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பது, தைவான் தொடர்பான பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சனைகள் ஆகியவை குறித்து சீனாவின் கவலைகள் பற்றியும், வாங் வென்டாவ் தெரிவித்தார்.