சீனாவில் முதலீட்டை அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள்
2024-02-27 18:35:41

அன்னிய முதலீடு, சீனப் பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும் கூட்டாக செழிப்பாக வளர்ந்து வருவதை முன்னேற்றுவதற்கான முக்கிய ஆற்றலாகும். அன்னிய முதலீட்டை நிதானப்படுத்துவதை இவ்வாண்டின் பொருளாதாரப் பணியில் முக்கிய இடத்தில் வைத்து, அன்னிய முதலீட்டை மேலும் பெரிதும் ஈர்த்து பயன்படுத்துவது தொடர்பான கொள்கை மற்றும் நடவடிக்கையை வெளியிட வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற சீன அரசவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. சீன அரசு வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டு ஜனவரியில் சீனாவில் 4588 வெளிநாட்டு முதலீட்டு தொழில் நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டன. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 74.4 விழுக்காடு அதிகரித்தது. உலகப் பொருளாதார வளர்ச்சியும் பன்னாடுகளின் வெளிநாட்டு முதலீடும் மந்தமான நிலையில் இருந்த போதிலும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் இலக்கிடமாக சீனா இன்னும் விளங்குகிறது. 

இவ்வாண்டு ஜனவரி திங்கள், சீனாவின் உயர் தொழில் நுட்ப தொழிற்துறை ஈர்த்த அன்னிய முதலீட்டுத் தொகை, 3916 கோடி யுவானை எட்டியது. சீனா உண்மையாக பயன்படுத்திய மொத்த அன்னிய முதலீட்டுத் தொகையில் இது 34.7 விழுக்காடாகும். இதில் உயர் தொழில் நுட்ப தயாரிப்பு துறை உண்மையாக பயன்படுத்திய அன்னிய முதலீடு 40.6 விழுக்காடு அதிகரித்தது. கடந்த ஆண்டு முதல் தொழில் கட்டமைப்பு மேம்பட்டு, தயாரிப்பு துறை அதிகரிப்பு மீட்சி அடையும் போக்கு காணப்பட்டுள்ளது. உயர் தர வளர்ச்சியின் தூண்டுதலுடன், சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு செய்யும் முறை மேம்பட்டு வருவதை இது வெளிப்படுத்துகிறது.

அன்னிய முதலீட்டின் ஊற்றுமூலத்தை பார்க்கலாம். இவ்வாண்டு ஜனவரி திங்கள், சீனாவில் வளர்ந்த மேலை நாடுகளின் முதலீடு பெரிதும் அதிகரித்தது. இதில், பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனின் முதலீட்டு தொகை முறையே 25 மடங்காகவும், 11 மடங்காகவும் அதிகரித்தது. ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் சீனாவில் செய்த முதலீடும் அதிகரித்துள்ளது.

சீனாவில் முதலீடு செய்த வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைத்தது. கடந்த 5 ஆண்டுகளில், சீனாவில் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் நேரடி முதலீட்டு ஈட்ட விகிதம் சுமார் 9 விழுக்காடாகும். இது உலகில் முன்னணியில் இருக்கிறது.

சர்வதேச வர்த்தகத்தின் முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, விசாரணைபடுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்களில் சுமார் 70 நிறுவனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனச் சந்தை மீது நம்பிக்கை கொள்வதாக தெரிவித்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவில் உள்ள முதலீட்டு லாப விகிதம், முன்பு இருந்ததற்குச் சமமாக இருக்கும் அல்லது ஓரளவு அதிகரிக்கும் என 90 விழுக்காட்டுக்கு மேலான வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு தெரிவித்தன. தொடர்புடைய கொள்கைகள் வெளியிடப்படுவதுடன், எதிர்காலத்தில் சீனா வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் அளவும், உலகில் வகிக்கும் விகிதாசாரமும் மென்மேலும் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.