முதல் மனித விண்வெளிப் பயணத்திற்காக நியமிக்கப்பட்ட இந்திய விண்வெளி வீரர்கள் அறிவிப்பு
2024-02-28 17:17:55

அடுத்த ஆண்டின் ககன்யான் விண்கலத் திட்டத்தின்படி, நாட்டின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கான விண்வெளி வீரர்களாக நியமிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானிகளை இந்திய அரசாங்கம் செவ்வாயன்று அறிவித்தது.

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விண்வெளி வீரர்களை அறிமுகம் செய்தார்.

1984 ஆம் ஆண்டு, சோவியத் பணியின் ஒரு பகுதியாக இந்திய நாட்டவர் ஒருவர் விண்வெளிக்குச் சென்றார்.

ககன்யான் திட்டமானது மூன்று விண்வெளி வீரர்களை, 400 கிமீ சுற்றுவட்டப்பாதையில் மூன்று நாள் பயணமாக அனுப்பி, இந்திய கடல் நீர் பகுதியில் தரையிறக்கி, அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியா சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் என்று மோடி கூறினார்.