ஜப்பான் 4வது தொகுதியான கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றுவது பற்றிய சீனாவின் கருத்து
2024-02-28 17:07:42

ஜப்பானின் டோக்கியோ மின்சார நிறுவனம் பிப்ரவரி 28 முதல் மார்ச் 17ஆம் நாள் வரை, சுமார் 7800 டன் எடையுடைய 4வது தொகுதியான கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றுகிறது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் கூறுகையில், சர்வதேச சமூகத்தின் கவனம் மற்றும் எதிர்ப்பை ஜப்பான் பொருட்படுத்தாமல், கடலில் 23 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான கதிரியக்க நீரை வெளியேற்றியுள்ளது. சீனா இதை உறுதியாக எதிர்த்ததோடு, ஜப்பான் இத்தவறான செயலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றது என்றார்.

மேலும், மனித குலத்தின் ஆரோக்கியம், உலகக் கடல் சுற்றுச்சூழல், சர்வதேசப் பொது நலன்கள் ஆகியவற்றுடன் இவ்விஷயம் தொடர்புடையது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் கவனத்தை ஜப்பான உணர்வுப்பூர்வமாக கையாண்டு, பொறுப்பேற்கும் மனப்பாங்குடன் இதை உகந்த முறையில் சமாளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.