காசா பகுதியில் பட்டினி நெருக்கடி:ஐ.நாவின் எச்சரிக்கை
2024-02-28 09:47:02

வடக்கு காசா பகுதியில் பட்டினி நெருக்கடி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. உலகளவில், அப்பகுதியில் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் மிகவும் கடுமையான நிலைமையில் சிக்கியுள்ளனர் என்று பிப்ரவரி 27ஆம் நாள், உலக உணவுத் திட்ட அலுவலகத்தின் துணை இயக்குநர் கார்ல் ஸ்கோ Karl Skauஎச்சரிக்கை விடுத்துள்ளார். 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஆறில் ஒரு பகுதிக்கு மேற்பட்டோர் கடும் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளாக உள்ளனர். பாதுகாப்பான பெருமனவான மனித நேய உதவி இல்லா விட்டால், மனிய நேய உதவி வழங்கும் பணியாளர்கள் தேவையான மீட்புதவி செயல்களை மேற்கொள்ள முடியாது. இப்பகுதியில் தற்போதைய கடுமையான மனித நேய நெருக்கடியையும் சமாளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.