2024 தைவானுக்கான பணிக் கூட்டம் 22, 23ஆம் நாளில் நடைபெறுதல்
2024-02-28 11:52:35

சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம் பிப்ரவரி 28ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் 2024ஆம் ஆண்டின் தைவானுக்கான பணிக் கூட்டம் பிப்ரவரி 22 மற்றும் 23ஆம் நாளில் பெய்ஜிங்கில் நடைபெற்றுள்ளதாகச் செய்தித் தொடர்பாளர் ட்சுஃபுங்லியேன் தெரிவித்தார். சீனப் பெருநிலப்பகுதித் தரப்பு, பணிக் கூட்டத்தின் ஏற்பாடு மற்றும் கோரிக்கையின்படி, நவ யுகத்தில் ஷிச்சின்பிங்கின் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச சிந்தனையை வழிகாட்டலாக்கி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மாநாடு மற்றும் 20ஆவது மத்திய கமிட்டியின் 2ஆவது முழு அமர்வின் சிந்தனைகளைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதோடு, நவ யுகத்தில் தைவான் பிரச்சினையின் தீர்வுக்கான கட்சியின் ஒட்டுமொத்த நெடுநோக்குக் கொள்கையை உறுதியாக நடைமுறைப்படுத்தி ஒரே சீனா கொள்கை மற்றும் 1992 ஒருமித்த கருத்தில் உறுதியாக நின்று, இரு கரை உறவின் அமைதியான வளர்ச்சி மற்றும் சீனாவின் ஒருமைப்பாட்டு முன்னேற்றப் போக்கை முன்னேற்ற வேண்டும். தைவான் தீவின் நாட்டுப்பற்று மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவான சக்திக்கு உறுதியாக ஆதரவளித்து தைவான் உடன்பிறப்புக்களை பரந்த அளவில் ஒன்றுபடுத்தி, தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையைப் பேணிக்காக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.