78ஆவது ஐ.நா. பாதுகாப்பவையின் பிரதிநிதி மற்றும் வாங் யீ சந்திப்பு
2024-02-29 11:20:17

78ஆவது ஐ.நா. பாதுகாப்பவையின் சீர்திருத்தம் பற்றிய அரசுகளிடையே பேச்சுவார்த்தை அமைப்புமுறையின் கூட்டுத் தலைவரும், ஐ.நா.வுக்கான குவெய்த் நிரந்தரப் பிரதிநிதியுமான பனாய், ஐ.நா.வுக்கான ஆஸ்திரிய நிரந்தரப் பிரதிநிதி அலெக்சாண்டர் மார்ஷிக் ஆகியோரைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ பிப்ரவரி 28ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார்.

வாங் யீ கூறுகையில், சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து, உலக மேளாண்மை அமைப்புமுறையின் சீர்திருத்தம் மற்றும் கட்டுமானத்தை முன்னேற்றி, ஐ.நா.வின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் ஆதரித்து, மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்றார்.

ஐ.நா.வின் பங்குகளை வலுப்படுத்தவும், பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்கவும், ஐ.நா. சாசனத்தின் குறிக்கோளையும் கோட்பாட்டையும் பேணிகாக்கவும் சீனா நீண்டகாலமாக பாடுபட்டு வருகின்றது என்று பனாய் மார்ஷிக் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.