சீன அரசின் பணியறிக்கை பற்றிய விவாதிப்பு
2024-02-29 16:08:54

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு, பிப்ரவரி 29ஆம் நாள் நடத்திய கூட்டம் ஒன்றில், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடருக்கு சீன அரசவை, ஒப்படைக்கும் அரசு பணியறிக்கை விவாதிக்கப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டில், சிக்கலான சர்வதேச சூழலையும் உள் நாட்டு சீர்திருத்தம் வளர்ச்சி நிதானம் ஆகிய கடமைகளையும் சந்தித்த நிலைமையில், ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன மக்களுக்கும் தலைமை தாங்கி, வெளிப்புற நிர்பந்தத்தையும் உள் நாட்டு இன்னல்களையும் சமாளித்து, சீன பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. உயர் தர வளர்ச்சியையும் நவீனமயமாக்க சோஷலிச நாட்டைக் கட்டமைப்பதையும் முன்னெடுத்துள்ளது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.