2023ஆம் ஆண்டு சீனாவில் தினசரி அதிகரிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 27 ஆயிரம்
2024-02-29 19:37:25

2023ஆம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான புள்ளிவிவர அறிக்கையைச் சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு, சீனாவில் அதிகரிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரமாகும். தினசரி அதிகரிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாகும்.

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் துணைத் தலைவர் கூறுகையில், சீனாவின் ஒருங்கிணைப்பான பெரிய சந்தை கட்டுமானம் பெரிதும் முன்னேற்றப்பட்டு வருகிறது. சந்தைமயமாக்கம், சட்ட ஒழுங்கு மயமாக்கம், சர்வதேசமயமாக்கம் ஆகியவற்றைக் கொண்ட வணிகச் சூழலைச் சீனா தொடர்ச்சியாக உருவாக்கி, அரசு சாரா பொருளாதார வளர்ச்சியின் சுற்றுச்சூழலை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியின் இயக்காற்றல் மற்றும் ஈர்ப்பு ஆற்றலை அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டு, அரசு சாரா தொழில் நிறுவனங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை, மொத்த தொகையிலுள்ள விகிதாசாரம் 53.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றார்.