அடுத்த ஆறு ஆண்டுகளில் ரஷியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு
2024-03-01 17:24:23

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் பிப்ரவரி 29ஆம் நாள் மாஸ்கோவில் நாடாளுமன்றத்தின் மேல் அவை மற்றும் கீழ் அவையில் நாட்டின் நிலைமை பற்றிய அறிக்கையை வழங்கி, அடுத்த ஆறு ஆண்டுகளில் ரஷியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை முன்வைத்தார்.

புதின் கூறுகையில், 2030ஆம் ஆண்டு வரை, ரஷியாவின் உயர் தொழில் நுட்பப் பொருட்கள் மற்றும் சேவை, ரஷியச் சந்தையில் வகிக்கும் விகிதாசாரம், 50 விழுக்காட்டை அதிகரிக்க வேண்டும். மூலப் பொருள் மற்றும் எரியாற்றல் சாராப் பொருட்களின் ஏற்றுமதி குறைந்தது மூன்றில் இரண்டு பகுதியை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 2030ஆம் ஆண்டு வரை, ரஷியாவின் இறக்குமதி தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வகிக்கும் விகிதாசாரம், 17 விழுக்காடு வரை குறைய வேண்டும். முக்கிய துறைகளிலான முதலீட்டுத் தொகை 70 விழுக்காட்டை அதிகரிக்க வேண்டும். குறைந்தது 100 அறிவியல் தொழில் நுட்பப் பூங்காக்கள் புதிதாக நிறுவப்படும். செயற்கை நுண்ணறிவு துறையில் தன்னிறைவு நனவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.