ஹங்கேரியின் புதிய அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
2024-03-01 19:11:27

ஹங்கேரியின் புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்யோக் தாமஸுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பிப்ரவரி 29ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீன-ஹங்கேரி உறவு உயர் நிலையில் வளர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையில் உயர்நிலை தொடர்பு அதிகரித்துள்ளது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகள் செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளதோடு, சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் இரு நாடுகளும் சீராக ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளன என்றார்.

மேலும், சீன-ஹங்கேரி உறவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அரசுத் தலைவர் சுல்யோக் தாமஸுடன் இணைந்து, இரு நாட்டு அரசியல் நம்பிக்கை மற்றும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான உயர்தரக் கட்டுமானத்தை முன்னேற்றி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு புதிய நிலையில் நுழைவதற்கு வழிகாட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.