பிப்ரவரியிலுள்ள சீனக் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு 49.1விழுக்காடு
2024-03-01 11:10:52

பிப்ரவரி மாதத்தில் சீனாவின் கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டை சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனமும் தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் சேவைத் துறைக்கான ஆய்வு மையமும் மார்ச் முதல் நாள் வெளியிட்டன. வசந்த விழா விடுமுறையின் பாதிப்பில், சீனாவில் தயாரிப்புத் தொழிலின் உற்பத்தி குறிப்பிட்டளவில் தணிவடைந்து இருந்தாலும், தயாரிப்புத் தொழிலின் சந்தைத் தேவை ஒப்பீட்டளவில் நிதானமாக உள்ளது.

பிப்ரவரியில் சீனத் தயாரிப்புத் தொழிலின் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு 49.1விழுக்காடு ஆகும். இது கடந்த மாதத்தில் இருந்ததை விட, 0.1விழுக்காடு குறைவாகும். பிப்ரவரியில் உற்பத்திக் குறியீடு 49.8விழுக்காடாகும். இது, கடந்த மாதத்தில் இருந்ததை விட, 1.5விழுக்காடு குறைந்துள்ளது.

விலைவாசி குறியீட்டைப் பொருத்தவரை, உள்நாட்டுச்  சந்தையின் தேவை தொடர்ந்து மீட்சியுற்று அதிகரித்துள்ளதுடன், தயாரிப்புத் தொழிலின் உற்பத்திப் பொருட்களின் விலையும்  பொதுவாக உயர்ந்துள்ளது. 

தயாரிப்புத் தொழில் சாரா துறைகளின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வணிக நடவடிக்கைகள் குறியீடு கடந்த மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக உயர்ந்துள்ளது. தயாரிப்புத் தொழில் சாரா துறைகள் நிலைப்புத் தன்மையுடன் வளர்ந்துள்ளதோடு, விரிவாக்க முன்னேற்றப் போக்கையும் தொடர்ந்து விரைவுபடுத்தியுள்ளன.