சீனாவில் வெளிநாட்டவர்கள் செல்லிடபேசி மூலம் கட்டணம் செலுத்தும் உச்ச வரம்பு உயர்வு
2024-03-01 19:34:47

சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் மார்ச் முதல் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன மக்கள் வங்கியின் துணை தலைவர் ட்சாங் சிங்சுங் கூறுகையில், வெளிநாட்டவர்கள் சீனாவில் பயணம் மேற்கொண்டு, மக்களுடன் சந்திப்பு நடத்தி, வணிக அலுவலில் ஈடுபடும் போது செல்லிடபேசி மூலம் கட்டணம் செலுத்துவதில் இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இன்னல்களைச் சமாளிக்க கட்டணம் செலுத்துதல் நிறுவனங்கள் வசதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் என்றும் தெரிவித்தார்.

சீனாவுக்கு வருகை தரும் மக்கள் Alipay மற்றும் Wechatவுடன் வெளிநாட்டு வங்கி அட்டையை இணைக்கும் வெற்றி விகிதம் குறைவு என்ற பிரச்சினை குறித்து, Alipay மற்றும் tenpay எனும் கட்டணம் செலுத்துதல் நிறுவனங்கள் அலுவல் ஒழுங்கு முறையை மேம்படுத்தி, அட்டையுடன் இணைக்கும் பயனை உயர்த்த வேண்டும் என்று ட்சாங் சிங்சுங் தெரிவித்தார்.

சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் செல்லிடபேசி மூலம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் உச்ச வரம்பை ஆயிரம் அமெரிக்க டாலரிலிருந்து 5 ஆயிரம் டாலராக உயர்த்தி, ஆண்டின் மொத்த பரிவர்த்தனை உச்ச வரம்பை 10 ஆயிரம் டாலரிலிருந்து 50 ஆயிரம் டாலராக உயர்த்துமாறு Alipay மற்றும் tenpay எனும் கட்டணம் செலுத்துதல் நிறுவனங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.