7வது சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் ஆயத்தப் பணிகள் சீராக முன்னேற்றம்
2024-03-01 17:15:05

சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியின் பணியகம் பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 7வது சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் பங்கெடுக்கும் தொழில் நிறுவனங்கள் கையொப்பமிட்ட அரங்குகளின் நிலப்பரப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் சதூர மீட்டரைத் தாண்டியுள்ளது. உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைகளின் முன்னணி நிறுவனங்களிலுள்ள சுமார் 200 நிறுவனங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.

இப்பணியகத்தின் துணைத் தலைவர் வூ ட்செங்பிங் கூறுகையில், தற்போது, 7வது சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி பற்றிய பல்வேறு ஆயத்தப் பணிகள் சீராக முன்னேற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்கள் ஆக்கமுடன் பதிவு செய்து, நடைமுறை நடவடிக்கையின் மூலம், நடப்புப் பொருட்காட்சியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன என்றார்.

7வது சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காயில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.