சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது
2024-03-01 18:37:03

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டி நிரந்தரக் கமிட்டியின் 5வது கூட்டம் மார்ச் முதல் நாள் நடைபெற்றது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கையும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது முதல் இதுவரை ஆலோசனைகள் தொடர்பான பணி அறிக்கையும் அப்போது கேட்டறியப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.