இஸ்ரேல் பற்றிய அமெரிக்காவின் கொள்கை மீது மனநிறைவின்மை கொண்டுள்ள அமெரிக்க மக்கள்
2024-03-01 10:13:52

அமெரிக்க வான்படை வீரர் ஒருவர் வாஷிங்டனிலுள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு தீக்குளித்ததை விட, அமெரிக்காவின் இஸ்ரேல் கொள்கை மீது அதிகரித்து வரும் மனநிறைவின்மையை காட்டுவதில் மேலும் தெளிவான அறிகுறி எதுவும் இல்லை. அமெரிக்கப் படையைச் சேர்ந்த 25வயதான வீரர் ஆரான் புஷ்னேல் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்ததை தொடர்ந்து, ‘பொலிட்டிகோ ’எனும் இணையதளத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையிலேயே, இத்தகைய தீவிர எதிர்ப்புச் சம்பவம் முதல்முறையாக நிகழவில்லை. ‘பொலிட்டிகோ ’ இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் படி, புஷனேலின் தீக்குளிப்புச் சம்வபத்திற்கு முன்பு, காசா பற்றிய அமெரிக்காவின் கொள்கை ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில், கிட்டத்தட்ட 30ஆயிரம் அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். சுமார் 20லட்சம் பேர் வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.

பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலைத் தீர்க்கும் விதமாக, ‘இரு நாடுகள் தீர்வை’ ஆதரிப்பதாக, தற்போதைய அமெரிக்க அரசாங்கம் வெளிப்படையாக கூறியது. ஆனால், அமெரிக்காவின் இந்தக் கொள்கை தற்போது வரை நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. இறுதியில், புதிய சுற்று மோதலையே அது தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசியல்வாதிகளின் பார்வையில், போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களோ, பன்னாட்டுச் சமூகத்தில் எழுந்துள்ள கண்டனக் குரல்களோ முக்கியமானவை அல்ல. அது போன்றே, சொந்த நாட்டு மக்கள், தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டு தெரிவிக்கும் எதிர்ப்பும் முக்கியமானது அல்ல. அவர்களின் பார்வையில், அமெரிக்காவின் நலன் மற்றும் மேலாதிக்கம் மட்டுமே மிகவும் முக்கியமானது.