செங்கடல் நெருக்கடியைச் சமாளிப்பதில் சீனா-ஐரோப்பா சரக்கு ரயிலின் பங்கு
2024-03-02 19:01:09

தென் கொரிய நாளேடு வெளியிட்ட செய்தியின்படி, ஹெளதி அமைப்பினர் செங்கடல் வழித்தடத்தை முற்றுகையிடுவதன் காரணமாக, முழு உலகின் சரக்குப் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, தென் கொரியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான சரக்கு போக்குவரத்து கட்டணம் கடந்த 4 மாதங்களில் 250விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேவேளையில், சீனா சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் போன்ற போக்குவரத்து வழியைக் கொண்டுள்ளதால், தென் கொரிய நிறுவனங்களின் ஏற்றுமதி போட்டியாற்றல் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது.

கடற்வழி போக்குவரத்துடன் ஒப்பிடும்போது, சீன-ஐரோப்பா சரக்கு ரயில் பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டுள்ளது.

முதலாவதாக, நிலைத் தன்மை. அமெரிக்காவின் தூதாண்மை கொள்கை எனும் இதழில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், செங்கடலில் ஹெளதி அமைப்பின் தாக்குதல், பனாமா கால்வாய் வறட்சி, மலாக்கா ஜலசந்தி அருகில் உள்ளார்ந்த மோதல் ஆகிய காரணங்களால், கடல்வழி போக்குவரத்துக்குத் துறையில் தொண்டை போன்ற பங்காற்றும் இடங்களின் உறுதியற்றத் தன்மை வெளிப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஐரோப்பா மற்றும் ஆசியாவைக் கடந்து செல்லும் சரக்கு ரயில் போக்குவரத்துக்கு அதிகமான நம்பகத் தன்மை மற்றும் நேரம் தவறாமை ஆகிய சாதக அம்சங்கள் உள்ளன.

இரண்டாவதாக, கட்டணத்துடன் ஒப்பிட்டால், ஐ.நா.வர்த்தக வளர்ச்சி மன்றம் பிப்ரவரியில் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, கடந்த நவம்பரிலிருந்தே, ஷாங்காயிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவுக்குச் செல்லும் கட்டணம் சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது. சீன-ஐரோப்பா சரக்கு ரயிலை விட, கடற்வழி சரக்கு போக்குவரத்தின் விலை மேம்பாடு குறைந்துள்ளது.

தற்போது, சீனா-ஐரோப்பா சரக்கு ரயில், 25 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றது. 219 நகரங்கள் இதன் மூலம் இணைக்கப்படுகின்றன. உறுதித் தன்மை வாய்ந்த சர்வதேச சரக்கு போக்குவரத்துக்கான வினியோகச் சங்கிலி ஒன்றை இது உருவாக்கியுள்ளது.