இலங்கை ரூபாய் மதிப்பு உயர்வு
2024-03-02 19:03:29

இலங்கையின் ரூபாய் மதிப்பானது இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில் முக்கிய நாணயங்களுக்கு எதிராக அதிகரித்தது என்று அந்நாட்டு மத்திய வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.

அமெரிக்க டாலருக்கு எதிராக 4.4 விழுக்காடு, யுரோவுக்கு எதிராக 6.8 விழுக்காடு, ஸ்டெர்லிங் பவுண்ட்-க்கு எதிராக 5 விழுக்காடு, ஜப்பானின் யென்னுக்கு எதிராக 10.8 விழுக்காடு, ஆஸ்திரேலியா டாலருக்கு எதிராக 9.8 விழுக்காடு, இந்திய ரூபாய்க்கு எதிராக 4.2 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டியது.

இதனிடையே, கடந்த ஜனவரி இறுதியில் ஒட்டுமொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து 450 கோடி டாலரை எட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 4 ஆண்டுகளில் இவ்வாண்டு ஜனவரியில் கிடைத்த சுற்றுலா வருவாய் புதிய உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது