1 கோடி குடும்பத்துக்கு சூரிய ஆற்றல் திட்டம் – இந்தியா
2024-03-02 19:04:30

இந்தியாவில் 1 கோடி குடும்பத்துக்கு வீட்டின் கூரை மீது சூரிய ஆற்றல் உற்பத்திக்கான சூரியத் தகடுகள் பொருத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், ஒவ்வொரு குடும்பத்தினரும் மாதம் ஒன்றுக்கு 300 யுனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கப் பெறுவர்.

குடும்பத்தினருக்கு மின்சாரக் கட்டணச் செலவு தவிர்ப்பதோடு, கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலை பகிர்வு நிறுவனங்களுக்கு அளித்து அதன்மூலம் வருவாயையும் ஈட்ட முடியும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புத்துப்பிக்கத் தக்க ஆற்றலை முன்னெடுத்து வரும் அரசின்  முயற்சிக்கு இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி, விநியோகச் சங்கிலி, விற்பனை, தகடுகள் பொருத்துதல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் நேரடியாக சுமார் 17 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.