இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் கருத்து
2024-03-02 20:08:08

இந்தியாவின் செய்தி ஊடகம் தைவான் பிரதேசத்தின் வெளிவிவகாரத் துறைப் பொறுப்பாளரிடம் பேட்டி காண்பது பற்றி இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் கருத்துத் தெரிவித்தார்.

பிப்ரவரி 29ஆம் நாளன்று இந்தியாவின் தொலைக்காட்சி நிலையம் ஒன்று, தைவான் ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் அதிகார வட்டாரத்தைச் சேர்ந்த வெளிவிவகாரத் துறைப் பொறுப்பாளர் வூ சாவ் சியேவுடனான பேட்டியை ஒளிப்பரப்பி, தைவான் சுதந்திரம் மற்றும் போலியானக் கூற்றுகளைப் பிரச்சாரம் செய்தது. இந்த நடவடிக்கை, ஒரே சீனா என்ற கோட்பாட்டை கடுமையாக அத்துமீறியுள்ளது. இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய நாடுகள் அனைத்தும், ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றிநிற்கும் வாக்குறுதியை உறுதியாக பின்பற்ற வேண்டும். இதுவே, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகும். இந்தியாவின் தொடர்புடைய ஊடகங்கள், சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு உள்ளிட்ட முக்கிய மைய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை நிலைநிறுத்தி, தைவான் சுதந்திரவாதிகளுக்கு செய்தி வெளியிட மேடை வழங்கக் கூடாது, தவறான சமிகையை வெளியிடாமல் தவிர்க்க வேண்டும் என்று செய்தித்தொடர்பாளர் வறியுறுத்தினார்.