விண்வெளிவீரர்கள் விண்கல வெளியே முதல் முறை செப்பனீட்டு கடமை வெற்றி
2024-03-02 20:04:23

பெய்ஜிங் நேரத்தின் படி மார்ச் 2ஆம் நாள் மதியம் 132 மணிக்கு, சென்செள 17 எனும் விண்கலத்தின் விண்வெளிவீரர்கள், அறையிலிருந்து வெளியே வந்து சுமார் 8 மணி நேரம் பல்வேறு ஆய்வுப் பணிகளை நிறைவேற்றி பாதுகாப்பாக வென்தியென் என்னும் ஆய்வு கலத்துக்குத் திரும்பினர்.

திட்டப்படி, சென்செள 17 விண்கலம் மனிதரை ஏற்றிச்செல்லும் பயணக்காலத்தில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆய்வுகளையும் மேற்கொள்ளவுள்ளது.