பாகிஸ்தான் தலைமையமைச்சர் நவாஸ் ஷெரிபுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2024-03-03 19:58:34

பாகிஸ்தான் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிபுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 3ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இதில் ஷிச்சின்பிங் கூறுகையில், நவாஸ் ஷெரிப் மற்றும் புதிய பாகிஸ்தான் அரசின் தலைமையில், அந்நாட்டின் பல்வேறு வட்டாரங்களின் ஒற்றுமையுடன், பாகிஸ்தான் தேசிய வளர்ச்சியில் அதிகமான புதிய சாதனைகளைப் பெறும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

அதே நாள் சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங்கும் நவாஸ் ஷெரிபுக்கு வாழ்த்து தெரிவித்தார்.