WTOவின் 13ஆவது அமைச்சர் நிலை கூட்டம் நிறைவு
2024-03-03 17:07:48

பிப்ரவரி 26ஆம் நாள் முதல் மார்ச் 2ஆம் நாள் வரை உலக வர்த்தக அமைப்பின் 13ஆவது அமைச்சர் நிலை கூட்டம் அபுதாபியில் நடைபெற்றது. சீனாவின் பிரதிநிதிக்குழு இக்கூட்டத்தில் பேச்சுவார்த்தையையும் ஒத்துழைப்பையும் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றியதுடன், அனைத்து கலந்தாய்வுகளிலும் கலந்துகொண்டு, கூட்டத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது.

அபுதாபி அமைச்சர்கள் அறிக்கை இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையை வலுப்படுத்தி, உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தை தொடர்ந்து முன்னேற்றுவோம் உறுப்பினர்கள் வாக்குறுதியளித்தனர்.

சீனா இக்கூட்டத்தின் சாதனைகளை ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றி, வளரும் நாடுகளின் சரியான உரிமைகளையும் நலன்களையும் பேணிக்காத்து, உலக பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளை மேம்படுத்துவதற்கும், உலக பொருளாதார நிர்வாகத்தில் பங்கெடுப்பதற்கும் தொடர்ந்து முன்மொழிவு வழங்கும்.