சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்ச்சி நிரல் வெளியீடு
2024-03-03 17:18:45

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் கூட்டம் மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், இக்கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் லியூ ஜெயீ, சீன மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிடம், நடப்பு கூட்டத்தொடருடன் தொடர்புடைய விவரங்களை அறிமுகம் செய்ததுடன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், இக்கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் பிற்பகல் 3மணிக்கு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் தொடங்க உள்ளதாகவும், 6 நாட்கள் தொடர்ந்து மார்ச் 10ஆம் நாள் முற்பகல் நிறைவடைவதாகவும் தெரிவித்தார்.

தவிரவும், கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்ச்சி நிரலையும் அவர் வெளியிட்டார். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கையைக் கேட்டறியப்பட்டு பரிசீலனை செய்யப்படுவது உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.