இலங்கை பள்ளிகளில் ஏஐ வகுப்பு
2024-03-04 20:02:53

இலங்கையில் முன்மாதிரித் திட்டமாக பள்ளிகளில் தொழில்நுட்ப பாடப்பிரிவின்கீழ் செயற்கை நுண்ணறிவு பாடம் 8ஆம் வகுப்பிலிருந்து நடத்தப்படும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் பிரேமஜயந்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இத்திட்டம் 20 பள்ளிக்கூடங்களில் வரும் 19ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் மேலும் கூறுகையில், ஏஐ தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், வரும் ஆண்டில் நாடு முழுவதும் இப்பாடம் பயிற்றுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏஐ தொடர்பான தேசியத் திட்டம் வகுப்பதற்கு அமைக்கப்பட்ட செயற்குழுவின் பரிந்துரைப்படி பள்ளிகளில் ஏஐ திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.