காசா பகுதியில் மனித நேய உதவிக்கு இஸ்ரேல் தடை
2024-03-04 10:20:50

அமெரிக்காவின் சி.என்.என் தொலைகாட்சி நிறுவனம் மார்ச் 2ஆம் நாள் வெளியிட்ட புதிய புலனாய்வின்படி, காசா பகுதிக்கு மனித நேய நிவாரணப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் தடை செய்து வருகிறது. மயக்க மருந்து, மயக்க மருந்து இயந்திரம், ஆக்சிஜன் சிலிண்டர், செயற்கை சுவாசிக் கருவி,தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் அமைப்பு முதலியவை இதில் அடக்கம்.

காசாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப முடியமா இல்லையா தொடர்பாக, இஸ்ரேலின் வரையறை தன்னிச்சையானது என்று இப்பகுதிக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பப் பொறுப்பேற்கின்ற பணியாளர்களும் அதிகாரிகளும் தெரிவித்தனர்.