சீனச் சந்தை மீது வெளிநாட்டு நிறுவனங்களின் அதிக நம்பிக்கை அதிகரிப்பு
2024-03-04 20:03:34

அமெரிக்க வணிகச் சங்கத் தலைவரின் தலைமையிலான குழுவின் சீனப் பயணம் பற்றிய கேள்விக்கு, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் 4ஆம் நாள் பதில் அளித்தார்.

சில காலமாக, அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் சீனச் சந்தையின் வளர்ச்சி மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன், சீனாவில் முதலீட்டையும் அதிகரித்து வந்துள்ளதை கவனித்தோம் என்று தெரிவித்தார். மேலும், சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சீனாவில் உண்மையில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு மூலதன அளவு, ஒரு இலட்சத்து 10ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது. அது, உலகின் முன்னணியில் உள்ளது. கடந்த ஜனவரியில் சீனாவில் வெளிநாட்டு முதலீட்டுடன் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 4588ஆகும். இது, கடந்த ஆண்டு ஜனவரியில் இருந்ததை விட 74.4விழுக்காடு அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.