சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் துவக்கம்
2024-03-04 14:42:15

சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனாவின் 14வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் காலை துவங்கி, மார்ச் 11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும். 7 நாட்கள் நீடிக்கும். இக்கூட்டத்தொடரில் மொத்தம் 3 முழுமையான கூட்டங்கள் நடைபெறவுள்ளது என்று இக்கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் லோ சின் ஜியான் விளக்கிக்கூறினார்.

இக்கூட்டத்தொடருக்கான ஆயத்தக் கூட்டம் 4ஆம் நாள் காலை நடைபெற்றது. இக்கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு பணியறிக்கை, தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கை, உச்ச மக்கள் நீதி மன்றத்தின் பணியறிக்கை, உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கை முதலிய 7 உள்ளடக்கங்களைப் பரிசீலனை செய்வது, இக்கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் அடங்கும்.